Published : 03 May 2015 12:40 PM
Last Updated : 03 May 2015 12:40 PM
வாட்ஸ்ஆப் போன்றவை பரவலான பின்னர், அதில் பரப்பப்படும் செய்திகள் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களைப் பொதுவெளியில் கடைபரப்பிவிடுகின்றன. நெருக்கமானவர்கள் என்று நம்பியவர்களால் தங்கள் அந்தரங்கம் காற்றில் பரவுவதை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் தவித்துவருகின்றனர்.
யார் நல்லவர், யாரிடம் சில தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சந்தேகங்களை எல்லாம் தீர்க்கும் அப்ளிகேஷனை அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு ஈடு கொடுக்கும் ஒரு அப்ளிகேஷனை மேட்ச்ஃபை சர்வீஸஸ் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டவட்டமாக...
மேட்சிஃபை (Matchify) என்ற இந்த அப்ளிகேஷனில் பெண்களுக்கு உகந்த பல அம்சங்கள் உள்ளன. இந்த அப்ளிகேஷன் மூலம் ஆண்களின் புரொஃபைல் விவரங்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியும். அந்த நபர் சரியானவரா என்பதை அவர்கள் அறிந்துகொண்ட பின்னர், பாதுகாப்பான உரையாடலை நிகழ்த்துவதற்கு இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. அதேபோல் யாரெல்லாம் தங்கள் புரொஃபைல் விவரங்களைப் பார்க்கலாம் என்பதைப் பெண்கள் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். விருப்பமற்ற நபரைத் தவிர்த்துவிடவும் முடியும்.
இன்றைய நவீனப் பெண்ணுக்குத் தேவையான நிம்மதியான உறவுகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டே இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டதாக மேட்சிஃபை நிறுவனத்தின் தலைவர் சாய்சித்ரா தெரிவிக்கிறார். இந்த அப்ளிகேஷனை கூகுள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT