Published : 08 Mar 2015 12:01 PM
Last Updated : 08 Mar 2015 12:01 PM

பெண்ணுரிமை பேணுவோம்

1909-ம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன் முதலில் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சோஷலிச கட்சி கொண்டுவந்த தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க பார்லிமென்ட் ஏற்றுக் கொண்டது.

முதன் முதலில் பிப்ரவரி 28-ம் தேதியை தேசிய பெண்கள் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும்படி பல நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டான 1911-ல் இந்த வேண்டுகோளின் பேரில், பல நாடுகள் மீண்டும் இதுகுறித்து விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19-ம் தேதி கொண்டாட அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913-ல் ஒன்று கூடி, மார்ச் 8-ம் தேதியை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஆண்டுதோறும், மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்ணுரிமை என்பது பொருளாதாரம், சமூக அமைப்பு உள்பட அனைத்து வகைகளிலும் ஆண்களுக்கு அடிமைப்பட்டு இருக்கும் நிலை மாறி சம உரிமையுடன் சக மனுஷியாக வாழ வழி செய்வதுதான்.

இதனால் பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், அவர்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x