Last Updated : 15 Dec, 2014 05:07 PM

 

Published : 15 Dec 2014 05:07 PM
Last Updated : 15 Dec 2014 05:07 PM

விளையும் பயிர்!

எதையும் சாதிக்க வயது தடையல்ல என்பதற்கு உதாரணம் அபிநயா பரணிகுமார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த இவர், ஏழாம் வகுப்பு மாணவி. அபிநயா செய்கிற கைவினைப் பொருள் ஒவ்வொன்றிலும் தனித்துவமும் கலைநயமும் நிறைந்திருக்கின்றன. கலைப் பொருட்களின் நேர்த்தியைப் பார்க்கிற யாரும் அதை அபிநயாதான் செய்திருப்பார் என்பதை நம்ப மறுக்கக்கூடும். அபிநயாவின் அம்மா அனிதா அதைப் பெருமிதத்துடன் ஆமோதிக்கிறார்.

“நிறையப் பேர் அந்த மாதிரிதான் கேட்கறாங்க. ஒரு முறை கைவினைப் பொருட்கள் செய்யற போட்டியில அபிநயா கலந்துக்கிட்டா. அங்கே வந்திருந்த நடுவர்களுக்கே சந்தேகம் வந்தது. அப்புறம் அவங்க முன்னாலயே சில பொருட்களைச் செய்து காட்டினதும் அவங்களே அசந்துட்டாங்க” என்று அனிதா மகிழ்வுடன் சொல்கிறார்.

அனிதாவும் கைவினைக் கலைஞர். பலவிதமான ஓவியங்கள், பொம்மைகள், துணிகளில் சாயமேற்றுதல், ஃபேஷன் நகைகள், பழரசங்கள், சாஸ் வகைகள், ஜாம் வகைகள், சோப்புத் தூள், வாசனைத் திரவியங்கள் எனப் பல்வேறு கலைகளைக் கற்றுவைத்திருக்கிறார். ஊனமுற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஆகியோருக்குப் பயிற்சியும் அளிக்கிறார். சமீபத்தில் நடந்த விபத்துக்குப் பிறகு கைவினைப் பொருட்கள் செய்வதைக் குறைத்துக்கொண்டு, தேவைப்படுகிறவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் மட்டும் எடுத்துவருகிறார்.

தன் அம்மாவிடம் இருந்து சில கலைகளைக் கற்றுக்கொண்ட அபிநயா, அதில் தன் கற்பனையையும் இணைத்துப் புதுவிதமான கலைப்பொருளாக்கிவிடுகிறார். அபிநயா நான்காம் வகுப்பு படிக்கும்போது காகித பொம்மைகள், களிமண்ணில் மரங்கள், வண்டுகள் ஆகியவற்றைச் செய்யப் பழகியிருக்கிறார். பிறகு அக்ரூட் விதையில் விதவிதமான கலைப் பொருட்களைச் செய்தவர், தற்போது தென்னம்பாளை, கமுகு மரத்தின் பாளைகளைக் கையில் எடுத்திருக்கிறார்.

அபிநயா தன் அம்மாவிடம் இருந்து சில கலைகளைக் கற்றுக்கொண்ட அபிநயா, அதில் தன் கற்பனையையும் இணைத்துப் புதுவிதமான கலைப்பொருளாக்கிவிடுகிறார். அபிநயா நான்காம் வகுப்பு படிக்கும்போது காகித பொம்மைகள், களிமண்ணில் மரங்கள், வண்டுகள் ஆகியவற்றைச் செய்யப் பழகியிருக்கிறார். பிறகு அக்ரூட் விதையில் விதவிதமான கலைப் பொருட்களைச் செய்தவர், தற்போது தென்னம்பாளை, கமுகு மரத்தின் பாளைகளைக் கையில் எடுத்திருக்கிறார்.

“நான் ஒரு முறை மாநில அளவிலான கைவினைப் பொருட்கள் போட்டியில் கலந்துகொண்டேன். அங்கே நடுவராக வந்திருந்த உமாபதி சார் எனக்கு நிறைய பயிற்சி கொடுத்தார். அவரோட ஊக்குவிப்பால இப்போ நிறைய கைவினைப் பொருட்கள் செய்யறேன். என் நண்பர்கள் எல்லாம் எப்படி உன்னால முடியுதுன்னு என்கிட்டே ஆச்சரியமா கேட்பாங்க. என்னைச் சுத்தியிருக்கறவங்களோட பாராட்டுதான் இன்னும் நிறைய சாதிக்கணும்ங்கற எண்ணத்தைத் தருது” என்று சொல்கிற அபிநயா, படிப்பிலும் அசத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x