Published : 07 Dec 2014 11:00 AM
Last Updated : 07 Dec 2014 11:00 AM

குறிப்புகள் பலவிதம்: தள்ளாமை தவிர்க்கும் வாழையிலை

* வேப்பிலைக் கொழுந்தை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் பருத்தொல்லை நீங்கும்.

* காலையில் சத்துள்ள உணவும் இரவில் அரை வயிறு உணவும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.

* வாழையிலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தி வரும்.

* வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் சிறிதளவு வினிகர் கலந்து குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.

* காய்ச்சல் குணமாக மிளகைப் பொடி செய்து கஷாயமாகக் குடித்துவரலாம்.

* புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் பல் துலக்கும்போது அந்தப் பொடியுடன் உப்பு சேர்த்துத் துலக்கினால் பல் நோய்கள் வராது.

- சொ.மு. முத்து, ஓமலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x