Published : 27 Aug 2017 03:04 PM
Last Updated : 27 Aug 2017 03:04 PM

போகிற போக்கில்: விற்பனைக்குத் தனிக் கணக்கு!

கி

டைத்த வேலையிலேயே திருப்தி அடைகிறவர் இல்லை வித்யப்ரியா. சென்னையைச் சேர்ந்த இவருக்குத் தனியார் வங்கி ஊழியர், கைவினைக் கலைஞர் என இரண்டு அடையாளங்கள்!

“எனக்குக் கைவினைப் பொருட்களில் ஆர்வம் ஏற்படக் காரணம் என் அம்மாதான். தேவையில்லாத பொருட்களையும் அழகான கைவினைப் பொருளாக மாற்றுவதில் அவர் வல்லவர்” என்கிறார் வித்யப்ரியா. அம்மாவைப் பார்த்து இவருக்கும் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் காகிதத்தில் கைவினைப் பொருட்கள் செய்தார். வளர்ந்ததும் அம்மா செய்கிற பொருட்களில் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதுபோல் இவருக்குத் தோன்றியது. அதனால் புதிதாக ஏதாவது செய்யலாமே என்று நினைத்தவருக்குச் சுடுமண் நகைகள் கைகொடுத்தன. யூடியூப், இணையதளம் போன்றவற்றின் உதவியோடு சுடுமண் நகைகள் செய்யக் கற்றுக்கொண்டார்.

எளிதில் கறுக்காத ஜெர்மன் சில்வர் நகைகள், கம்மல், சாதாரணக் கற்களில் செய்யப்படும் கம்மல், செயின் செட், கம்பளி நூலில் சில்வர் மணிகளைச் சேர்த்து செய்யும் ஆபரணங்கள் ஆகியவற்றைத் தற்போது செய்துவருகிறார். தான் செய்கிற பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து அதன் மூலம் வருவாயும் ஈட்டுகிறார்.

“விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நான் ஃபேஷன் நகைகள் செய்யத் தொடங்கவில்லை. ஆனால், அலுவலக நண்பர்கள், தோழிகள் ஆகியோருக்கு நான் செய்த ஆபரணங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவற்றைப் பார்த்த என் நண்பர்களின் நண்பர்கள், தங்களுக்கும் இதேபோன்ற நகைகள் வேண்டும் என ஆர்டர் கொடுத்தார்கள்” என்று சொல்கிறார் வித்யப்ரியா. முகநூலில் தனிப் பக்கத்தைத் தொடங்கும் அளவுக்கு இவர் முன்னேறியிருக்கிறார்.

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x