Last Updated : 20 Aug, 2017 01:52 PM

 

Published : 20 Aug 2017 01:52 PM
Last Updated : 20 Aug 2017 01:52 PM

சேனல் சிப்ஸ்: வில்லி அவதாரம்

ன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அபூர்வ ராகங்கள்’ தொடரில் சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஏகவல்லி, கடந்த சில வாரங்களாக வில்லியாக உருமாறிவிட்டார்.

‘‘இப்படியும் ஒரு நல்ல பொண்ணு ஊரில் உண்டா என எல்லோரும் பாராட்டும் அளவுக்கு இருந்த என்னோட பத்மினி கதாபாத்திரம், பயங்கர வில்லத்தனமாக மாறியதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் நடிப்புக்கு வேலை இருக்கிற மாதிரியான கதாபாத்திரங்களில் முகம் காட்டினால்தானே நல்லது? அதனால்தான் இப்படி மாறிவிட்டேன். அதுவும் ஒரே சீரியலில் நல்ல பொண்ணாக நடித்துவிட்டு, சில காரணங்களுக்காக வில்லியாக மாறும்போது பார்வையாளர்களும் ஆச்சரியமாகவே பார்க்கிறார்கள். வெளியே போகும்போது ‘ஏன் பத்மினி இப்படி மாறீட்டே’ன்னு பத்துல எட்டுப் பேர் கேட்கிறாங்க. இந்த வரவேற்புக்காகவே அடுத்து ஒரு புது சீரியலிலும் வில்லி கதாபாத்திரம் ஏற்கப் போகிறேன்’’ என்று சொல்லும் ஏகவல்லி, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘காளி’ படத்தில் நாயகியின் தோழியாக நடித்துள்ளார்.

நாடக விழா

ஜெ

யா தொலைக்காட்சியில் ‘மியூசிக் கஃபே’ என்ற புதிய நிகழ்ச்சியைக் கையில் எடுத்துள்ளார் தொகுப்பாளினி கிருத்திகா சூரஜித்.

“சின்னத்திரைக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. இசை, நடனம் இல்லாத நிகழ்ச்சிகள் இல்லாம இருந்ததேயில்லை. அந்த அளவுக்கு இசையும் நடனமும் என் வாழ்க்கையோடு கலந்திருக்கு. ஜெயா டிவியில் ‘தேன்கிண்ணம்’, ‘சிறப்பு காலை வணக்கம்’ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இப்போ புதுசா ஞாயிறுதோறும் ‘மியூசிக் கஃபே’ ஷோ போகுது. பின்னணிப் பாடகர், பாடகிகளின் இசைப் பயணத்தை மையமாகக்கொண்ட நிகழ்ச்சி இது. ஒவ்வொருவரது தனி அனுபவமும் இசை ஆர்வலர்களுக்குப் பயனுள்ளதா இருக்கு. இதைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ சார்பில் பி.சி. ராமகிருஷ்ணா சார் இயக்கத்தில் ‘சூடாமணி’ ஆங்கில மேடை நாடக நடிப்புக்கான வேலையில் இருக்கிறேன். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்த நாடகத்தில் நானும் என் கணவர் விக்ரம் ரவியும் சேர்ந்து நடிக்கப் போறோம். நாடக விழா செப்டம்பரில் இருக்கும்’’ என்கிறார் கிருத்திகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x