Published : 02 Nov 2014 02:34 PM
Last Updated : 02 Nov 2014 02:34 PM
# பூந்திக் கொட்டையின் மேல் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து அதில் பொன் நகைகளை (கல், முத்து, பவழம் போன்றவை கூடாது) ஒரு நாள் முழுக்க போட்டுவைக்கவும். மறுநாள் பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் அன்று வாங்கிய நகை போலவே பளபளக்கும்.
# நகைகள் அனைத்தையும் ஒரே டப்பாவில் போட்டு வைக்கக் கூடாது. தனித்தனி பிரிவு உள்ள நகைப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றில் வைத்துவிட்டால் நகைகள் நசுங்காமல் இருக்கும்.
# முத்து நகைகளை அணிந்துகொண்டு வெந்நீரில் குளிக்கக்கூடாது.
# நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. கல், முத்து நகைகள் மங்கிவிடக்கூடும்.
# தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களைச் சேர்த்து அணிந்தால் தங்க வளையல்கள் சீக்கிரம் தேய்மானம் அடைந்துவிடும்.
# வைரத் தோடு, மோதிரம், வளையல் ஆகியவை மங்கலாக இருந்தால் நான்கைந்து நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு வைத்து எடுத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.
# நகைகளை நின்றுகொண்டே கழட்டவோ, போடவோ கூடாது. அப்படிச் செய்வதால் கைதவறி மோதிரம், கம்மல் திருகாணி போன்றவை கீழே விழுந்துவிடக்கூடும். அதனால் உட்கார்ந்துகொண்டு மடியில் மெல்லிய துண்டை விரித்து நகைகளை அணிந்தால் அவை கீழே விழுந்தாலும் துண்டின் மீது விழும். சேதாரம் குறையும்.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT