Last Updated : 23 Apr, 2017 11:50 AM

 

Published : 23 Apr 2017 11:50 AM
Last Updated : 23 Apr 2017 11:50 AM

பயணங்கள் பலவிதம்: படங்களைப் பிரிக்கும் கோடு

வேலைக்கு நடுவே இளைப்பாறுவதற்காகச் சிலர் பயணம் செய்வார்கள். ஆனால் பயணம் செய்வதற்காகவே வேலையை விட்டவர் அலெக்ஸியா.

“எனக்குப் பயணங்கள் மீது தீராத காதல் உண்டு” என்று சொல்லும் அலெக்ஸியாவுக்கு சமச்சீரான இடங்கள் மீதும் அலாதிப் பிரியம். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று, அவற்றை இரண்டாகப் பிரிக்கிற சமச்சீர் புள்ளியில் நின்றுகொண்டு படம் எடுப்பது இவரது வழக்கம். லண்டன், கென்யா, இந்தியா, மியான்மர் என்று தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்று, படங்கள் எடுத்துத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறார்.

பிரத்யேகமான இந்தப் படங்களைப் பார்ப்பதற்காகவே பலர் அலெக்ஸியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்கிறார்கள். “உங்களுக்கும் இதேபோல சமச்சீர் இடங்கள் தெரிந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். நாங்கள் அந்த இடத்துக்குச் சென்று படமெடுத்துப் பதிவிடுகிறோம்” என்று தன்னைப் பின்தொடர்கிறவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் அலெக்ஸியா. இந்தியாவில் அவர் எடுத்த ஒளிப்படங்களில் சிலவற்றை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x