Published : 24 Feb 2019 10:07 AM
Last Updated : 24 Feb 2019 10:07 AM
பொதுவாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் இயற்கைக் காட்சி, கோயில், பாரம்பரிய விளையாட்டுகள், அரண்மனை போன்றவற்றை விரும்பிப் படம் எடுத்துச்செல்வார்கள்.
அந்தப் படங்கள்தாம் நம் நாட்டுப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உணர்த்துபவையாக உலக அளவில் காட்சிப்படுத்தப்படும். நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் பணிபுரியும் போலந்து நாட்டைச் சேர்ந்த மக்தலேனா வக்ரியானோ, அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவைக் காண வந்திருந்தார்.
அங்கு அவர் எடுத்த ஒளிப்படங்கள் இந்தியாவின் உண்மையான முகங்களை மிக நெருக்கத்தில் நமக்குக் காட்டுகின்றன. சமூகத்தால் விளம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் படங்கள் ஒவ்வொன்றும் எந்தவித விவரிப்பும் தேவைப்படாமல் ஆழமான தாக்கத்தை மனத்தில் ஏற்படுத்துகின்றன.
வெவ்வேறு வண்ணங்களில் பளிச்சிடும் அவர்களின் கண்கள் பார்வையாளர்களைவிட்டு எளிதில் அகலுவதில்லை. மக்தலேனே எடுத்த ஏராளமான படங்களில் சிலவற்றின் தொகுப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT