Last Updated : 24 Jun, 2018 12:18 PM

 

Published : 24 Jun 2018 12:18 PM
Last Updated : 24 Jun 2018 12:18 PM

பெண்கள் 360: கல்விக்கு வயது தடையல்ல

கல்விக்கு வயது தடையல்ல

கே

ரளத்தில் உள்ள ஆலப்புழையைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாளுக்கு 96 வயது. கேரள அரசின் கல்வியறிவுத் திட்டத்தின் கீழ் தற்போது அவர் நான்காம் வகுப்பு படித்துவருகிறார். அந்தத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலப் பலரும் தயங்கினர். ஆனால், கார்த்தியாயினி அம்மாள் கற்பதற்கு முதல் ஆளாக வந்தார். இப்போது கணக்கிலும் மலையாள எழுத்துகளிலும் அவர் நன்றாகத் தேர்ச்சிபெற்றுள்ளார். வயது வேகமாக அவரை விழுங்குகிறது. அவரோ பத்தாம் வகுப்பு முடிப்பது குறித்து நம்பிக்கையுடன் கனவு காண்கிறார். கலையாத கனவுதானே நம் வாழ்வு!

நதியைக் காக்கப் போராடும் பெண்கள்

த்துக்கோட்டைக்கும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக ஆரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றை நம்பியே அங்கு விவசாயம் நடக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு இங்கு மணல் குவாரியைத் தொடங்கியுள்ளது. ஆற்றை விழுங்கும் மணல் குவாரியை மூட வலியுறுத்தி ஊத்துக்கோட்டையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 55-க்கும் மேற்பட்ட பெண்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மனிதாபிமானமற்ற ட்ராம்ப்

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ‘டைம்’ இதழின் அட்டையில் இடம்பிடித்துள்ளார். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக வந்த அகதிகளின் குழந்தைகளை மட்டும் தனிக் காப்பகத்தில் அடைக்கும் உத்தரவால் அவருக்கு இந்த ‘பெருமை’ கிடைத்துள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த அட்டையில் அழுதுகொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தையை ட்ரம்ப் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் அருகில் ‘வெல்கம் டூ அமெரிக்கா’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவு இப்போது திரும்ப பெறப்பட்டுவிட்டது. இருந்தாலும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட அந்தக் குழந்தையின் கண்ணீர், ட்ரம்பின் மனிதாபிமானமற்ற குணத்துக்குச் சான்றாக நிலைத்துவிட்டது.

வலியைக் களைந்தவர்

வீன நல்வாழ்வு இயக்கத்தின் முன்னோடி ‘டேம் சிசிலி சாண்டர்ஸ்’. மருத்துவர், எழுத்தாளர், சமூக சேவகர் எனப் பல பாத்திரங்களைத் தன் வாழ்வில் ஏற்று அவர் வாழ்ந்துள்ளார். உயிருக்குப் போராடிய ஒரு நோயாளியின் வேதனை, அவர் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது. 1967-ல் லண்டனில் செயின்ட் கிறிஸ்டோபர் நல்வாழ்வு மையத்தைத் தொடங்கினார். தாங்க முடியாத வலியையும் வேதனையையும் கடந்து வரத் தேவையான மன தைரியத்தையும் ஊக்கத்தையும் நோயாளிகளுக்கு அளிப்பதே அந்த மையத்தின் பணி. சிசிலியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

தொகுப்பு:

முகமது ஹூசைன்

எண்ணமும் சொல்லும்

எப்படி வாழ்வோம்?

ங்கள் குடும்பத்தில் மூன்று பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 2011-ல் சேலம்-சென்னை நான்கு வழிச்சாலையால் வீடுகளையும் பெரும்பாலான நிலத்தையும் இழந்தோம். எஞ்சிய 12 ஏக்கர் நிலத்தில் கிழங்கு, நெல், சோளம் என சாகுபடி செய்து பிழைப்பை ஓட்டுகிறோம். இப்போது இந்த எட்டு வழிச்சாலையால் ஐந்து ஏக்கர் நிலம் பறிபோகிறது. தொடர்ந்து எங்கள் நிலத்தைப் பறித்தால் பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்வோம்? பெண் குழந்தைகளுக்கு எப்படித் திருமணம் செய்து வைப்போம்? உயிரற்ற தார்ச்சாலைக்கு இருக்கும் மதிப்பு உயிர் நிறைந்த விவசாய நிலத்துக்கு இல்லாமல் போய்விட்டதே.

- கவிதா, ராமலிங்கபுரம், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x