Last Updated : 17 Jun, 2018 11:15 AM

 

Published : 17 Jun 2018 11:15 AM
Last Updated : 17 Jun 2018 11:15 AM

போகிற போக்கில்: எண்ணமெல்லாம் வண்ணம்

னதுக்குப் பிடித்த காட்சிகளை ஓவியமாக்குவதில் வல்லவர் சென்னையைச் சேர்ந்த சந்தியா மன்னே. ஓவியப் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்த சந்தியாவுக்குச் சிறுவயது முதலே ஓவியக்கலை மீது ஆர்வம். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் அமெரிக்காவில் சிறிது காலம் தங்கியிருந்தபோது ஓவிய ஆர்வத்துக்குக் கச்சிதமான களம் அமைத்துக்கொண்டார்.

பல ஓவியப் பட்டறைகளுக்குச் சென்றதுடன் புகழ்பெற்ற ஓவியர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அதுவரை பொழுதுபோக்காக இருந்த ஓவியக்கலையை முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டார். பலவகை ஓவிய முறைகளோடு ஜென்டாங்கிள் என்ற புதுமையான ஓவிய முறையையும் சந்தியா கற்றுக்கொண்டார். பளிச்சிடும் வண்ணங்கள் இவரது ஓவியங்களின் தனிச்சிறப்பு.

தினமும் ஓர் ஓவியம்

2013 முதல் பல்வேறு குழுக்களுடன் இணைந்து சென்னை, கர்நாடகம், அமெரிக்கா எனப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

“புகழ்பெற்ற ஓவியர்கள் எப்படி வரையறாங்க, அவங்க எந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்துறாங்கன்னு கவனிப்பேன். பிறகு எனக்குப் பிடித்த விஷயங்களில் அந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தி வரைவேன்” என்று சொல்லும் சந்தியா, தான் வரையும் ஓவியங்களுக்காக இணையதளம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் தினம் ஒரு ஓவியமாவது வரைய வேண்டும் எனச் சொல்லும் சந்தியா, அதைக் கடைப்பிடித்தும் வருகிறார். “தினமும் சின்ன ஓவியமாவது வரைந்துவிடுவேன்.

ஓவியம் வரைவதை அன்றாட வேலையா மாத்திக்கிட்டாதான் நமக்குள்ள இருக்கும் திறமையை மேம்படுத்த முடியும்” என்கிறார். ஓவியப் பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் இவர், மாணவர்களின் தேவையைப் பொறுத்து ஆன்லைனிலும் பயிற்சியளிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x