Published : 15 Sep 2024 08:52 AM
Last Updated : 15 Sep 2024 08:52 AM

சேதி தெரியுமா?

ஆக.31: சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு உள்பட மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

செப்.1: தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெற்ற இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் முதலிடம் பிடித்தார்.

செப்.2: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

செப்.2: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

செப்.6: கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.

செப்.6: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கல்விக்குத் தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சியையும் அனுமதியின்றி நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

செப்.6: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

செப்.8: ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

செப்.8: பாரிஸ் பாராலிம்பிக்கில் 220 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 18ஆம் இடத்தைப் பிடித்தது.

செப்.8, 9: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

செப்.10: ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

செப்.12: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x