Published : 02 Jun 2024 07:57 AM
Last Updated : 02 Jun 2024 07:57 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 28: வண்டியை நிறுத்திய முழக்கம்

உரிமைக்கான போராட்டங்களில் விடுபடல்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. ‘இவர்களுக்கு மட்டும்’ அல்லது ‘இவர்களுக்கு முதலில்’ என்பது போன்ற ஒப்பந்தங்களுடனோ கோரிக்கைகளுடனோ சில உரிமைப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணான சோஜர்னர் ட்ரூத், இந்த விடுபடல்களைத்தான் கண்டித்தார். பெண்ணுரிமைக்கான போராட்டங்களில் அவர் பங்கெடுத்தபோது அமெரிக்க வெள்ளை இனப் பெண்களுக்கு இருக்கிற உரிமைகள் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களுக்கும் வேண்டும் என வாதிட்டார்.

ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கான வாக்குரிமைப் போராட்டத்திலும் இதேபோன்றதொரு விடுபடலை சோஜர்னர் சந்திக்க நேர்ந்தது. அடிமைமுறை ஒழிப்புக்காகவும் ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய ஃபிரடெரிக் டக்ளஸின் போராட்டங்களில் சோஜர்னர் பங்கேற்றார். ஆப்ரிக்க அமெரிக்கர்களில் ஆண்களுக்கு முதலில் வாக்குரிமை கிடைக்கட்டும், பிறகு பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடலாம் என்கிற டக்ளஸின் நிலைப்பாட்டில் சோஜர்னருக்கு உடன் பாடில்லை. பாலினப் பாகுபாடின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்குரிமை கிடைக்க வேண்டும் என்றார். தன் கருத்து களுக்காக டக்ளஸுடன் முரண்பட வேண்டியிருந்தபோதும் இறுதிவரை தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். சக போராளிகளோடு கருத்து மோதலில் ஈடுபட்டால் தான் தனித்துவிடப்படுவோம் என்று தெரிந்தபோதும் உரிமை களுக்காகத் தான் வகுத்துக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து சோஜர்னர் விலகவே இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x