Published : 19 May 2024 07:06 AM
Last Updated : 19 May 2024 07:06 AM
தமிழ் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என பாரதியாரைச் சொல்லலாம். நவீனக் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்களை முன்மாதிரியாகத் தமிழில் உருவாக்கிக் காட்டியவர் அவர்தான். பாரதியின் கவிதைகளில் கைக்கொண்டுள்ள சொற்பிரயோகம், பொருள் ஆகியவை இன்றைக்கும் வசீகரிக்கக்கூடியவை. பாரதியின் இந்த அம்சங்களுக்கு முன்னுதாரணம் எனக் கவிஞர் செங்கோட்டை ஆவுடையக்காளைச் சொல்லலாம்.
பக்தி மரபில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், அக்கமகாதேவி என்கிற வரிசையில் வைத்துப் பார்க்கப்படுபவர் ஆவுடையக்காள். ஆனால், இவரது கவிதைகளில் உள்ள நவீனத்துவமும் நாட்டார் பண்பும் இவரது கவிதைகளை அந்த எல்லைகளையும் தாண்டி விசேஷம் மிக்கதாக்குகின்றன. இந்தக் கவிதைகளைப் பக்தி என்னும் ஒற்றைப் பொருளின் கீழ் அடக்கிவிட முடியாது. வாழ்க்கையின் பொய்களை, பெண்களுக்கான சமூக விழுமியங்களை, பகட்டை இந்தக் கவிதைகள் விமர்சிக்கின்றன. அதேபோல் வேதாந்தப் பொருளையும் சொல்கின்றன. இதைச் சொல்வதற்கு ஆவுடையக்காள் இயல்பான மொழியைக் கைக்கொண்டுள்ளார். சந்த மரபில் இயல்பான மொழி என்கிற அம்சத்தில் ஒருவகையில் சித்தர் பாடல்களின் மொழியுடன் ஒப்பிடத்தகுந்தது இவரது கவி மொழி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT