Published : 28 Apr 2024 07:53 AM
Last Updated : 28 Apr 2024 07:53 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 26: சுதந்திர தேவியும் சுதந்திரமில்லாப் பெண்களும்

பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்காவின் 13 மாகாணங்கள் 1776இல் விடுதலை பெற்றதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தேவி’ சிலையைப் பரிசாக வழங்க பிரான்ஸ் முடிவெடுத்தது. அதற்குத் தன் நாட்டு மக்களிடமிருந்தும் நிதி திரட்டியது. நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் ‘விடுதலையே உலகுக்கு ஒளியூட்டும்’ என்கிற புகழ்பெற்ற பாடலும் அடங்கும்.

சிலை இறுதிவடிவம் பெறத் தாமதம் ஆனதால் நூற்றாண்டுக்குப் பத்து ஆண்டுகள் கழித்து 1886இல் ‘சுதந்திர தேவி’ சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அப்போதைய அமெரிக்கப் பிரதமர் குரோவர் கிளீவ்லேண்ட். விடுதலையின் உன்னதம் குறித்து அவர் எழுச்சியுரை ஆற்றுகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் லில்லி டெவ்ரொ பிளேக் தலைமையில் படகுகளில் அணிவகுத்தனர். அவர்களின் கைகளில் ‘அமெரிக்கப் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை’ என்று எழுதப்பட்ட பதாகைகள் இருந்தன. நாட்டின் விடுதலையைக் கொண்டாடும் தருணத்தில் தங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்துக் கவனப்படுத்திய லில்லி பிளேக், பெண்களின் வாக்குரிமைக்காகக் குரல்கொடுத்த பெண்ணுரிமைப் போராளிகளில் ஒருவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x