Published : 25 Feb 2018 12:10 PM
Last Updated : 25 Feb 2018 12:10 PM
வருகிற ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் தொடக்க நாள் அணிவகுப்பின்போது சேலைகளுக்குப் பதிலாக பேன்ட், கோட் அணிந்து செல்லலாம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதியளித்துள்ளது.
சேலை அணிவது அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆதரித்தும் எதிர்த்தும் வீராங்கனைகள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்):
இந்த முடிவு தவறானது. தொடக்க விழாவின்போது சேலை அணிந்து செல்வது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, தடகள வீராங்கனை லலிதா பாபர் இருவரும் இந்த மாற்றத்தை விரும்பவில்லை.
ஹீனா சித்து (துப்பாக்கிச் சுடுதல்):
தொடக்க விழாவில் கோட் மற்றும் பேன்ட் அணிவதுதான் சவுகரியமாக இருக்கும். கடந்த 2010-ல் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் சேலை அணிந்து செல்வதற்காக என் உறவினர் ஒருவரிடம் பயிற்சி எடுத்தேன். அணிவகுப்பின்போதும் மற்றவர் உதவியை நாட வேண்டியிருந்தது.
ஜூவாலா கட்டா (பாட்மிண்டன்):
சேலைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். சேலை அணிவதில் சிரமமும் அசவுகரியமும் இருந்தாலும், அதுதான் அழகு. தொடக்க விழாவில் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம் என்று என்னிடம் சொன்னால், சேலையைத்தான் தேர்வு செய்வேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஷைனி வில்சன் (தடகள முன்னாள் வீராங்கனை):
முக்கிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாக்களில் சேலைதான் அணிந்தோம். சேலை மற்ற நாட்டு வீராங்கனைகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டும். இதுதான் இந்தியாவின் பாரம்பரியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT