Published : 04 Feb 2018 11:55 AM
Last Updated : 04 Feb 2018 11:55 AM
இப்படிச் சொன்னாங்க
பெ
ண்ணியம், பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது நாங்கள் ஆண்களைப் பார்த்துதான் பேசுகிறோம். ஆண்களுக்கு அதில் பெரும் பங்கு இருக்கிறது. எப்படி ஆண்களாக இருக்க வேண்டுமென்று சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஆணாக எல்லாப் பெண்களையும் சம உரிமையுள்ளவர்களாக அவர்கள் அங்கீகரிப்பதற்கான கல்வி தேவை. சமத்துவத்துக்கான இயக்கத்தில் அப்போதுதான் ஆண்களும் பங்கேற்க முடியும்.
#டாவோஸ் பொருளாதாரக் கூட்டமைப்பில் யூசுஃப் ஸாய் மலாலா.
டூடுல் மூலை: கமலா தாஸ்
இ
ந்திய ஆங்கில நவீன கவிதையின் முன்னோடியான கமலா தாஸின் சுய சரிதை வெளியாகி 41 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கூகுள், டூடுல் வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. கமலா தாஸ் எழுதிய சுயசரிதையான ‘மை ஸ்டோரி’யில் அவரது குழந்தைப் பருவம் முதல் திருமணம்வரையிலான வாழ்க்கையை மிகவும் வெளிப்படையாக எழுதி, அதுவரை இந்தியப் பெண் எழுத்துக்கு இருந்த தடைகளைத் தகர்த்தார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய கமலா தாஸ், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவின் சிறந்த பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர். மலையாளத்தில் மாதவிக் குட்டி என்ற புனைபெயரில் அவர் எழுதினார்.
தனிப் பெண் பயணிகளுக்கு வுவாயேஜ்
இ
ந்தியாவில் தனியாகச் சுற்றுலா செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே இப்போதுவும் நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ராஷ்மி சத்தா 2016-ல் பெண்கள் தனியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு வுவாயேஜ் (Wovoyage) என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பெண்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சம் பிடிப்பதோடு அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தையும் தருவதற்கு உத்தரவாதம் தருகிறது வுவாயேஜ். இந்தப் பணியைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் 207 பயணங்களை ராஷ்மி சத்தா ஒருங்கிணைத்துள்ளார். தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெண் வழிகாட்டிகளையும் ராஷ்மி ஏற்பாடு செய்கிறார். பேருந்துப் பயணங்களுக்கும் உதவும் இவரது நிறுவனம், பெண் பயணிகளுக்கு முன் இருக்கையைக் குறைந்த கட்டணத்தில் எடுத்துத் தருகிறது. வெளிநாட்டுப் பயணங்களிலும் பெண் பயணிகளுக்கு உதவும் வுவாயேஜ், கடந்த எட்டு மாதங்களில் 45 லட்சத்தை வருவாயாக ஈட்டியுள்ளது. ராஷ்மி சத்தாவுக்கு டோக்கியோவிலும் ஒரு அலுவலகக் கிளை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT