Published : 09 Dec 2017 05:07 PM
Last Updated : 09 Dec 2017 05:07 PM
கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆறு பேர் நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர். இதில் நான்கு பேர் பெண்கள். இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மும்பை உயர் நீதிமன்றத்துக்கு அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் 11 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் ரிமோட் மூலம் இயக்கப்படும் செயற்கைக் கையை உருவாக்கியுள்ளனர். இந்தச் செயற்கைக் கை 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில மீனவர்கள் 91 பேர், ஒக்கி புயலால் நடுக்கடலில் காணாமல் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொலைந்துபோன மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT