Published : 07 Jan 2018 10:41 AM
Last Updated : 07 Jan 2018 10:41 AM
க
டந்த ஆண்டு இணையதளத்தில் உலகளவில் தேடப்பட்ட முக்கியமான வார்த்தைகளில் ஒன்று, ‘பெண்ணியம்’. இலக்கிய உலகில் பெண்கள் சார்ந்து எழுதப்படும் புத்தகங்களும் பெண் எழுத்தாளர்களின் வருகையும் இதற்கான காரணங்களில் முக்கியமானவை. இன்று அனைத்து நிலைகளில் இருந்தும் பெண்கள் எழுதவருகிறார்கள். பெண்களின் பிரச்சினைகள், உடல் அரசியல், வன்முறை போன்றவை குறித்து ஆண்களும் எழுதுவது மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளி. அந்த வகையில் கடந்த ஆண்டு கவனம் ஈர்த்த புத்தகங்க சிலவற்றின் தொகுப்பு:
கண்டேன் புதையலை
குழந்தைகளிடம் இயற்கையாகவே இருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை அவர்களிடம் உருவாக்குவது குறித்து அறிமுகம் செய்கிறது இந்நூல்.
ஆசிரியர்: ஆனி பிளாரன்ஸ் (எ) பிரியசகி
விலை : ரூ.160
வெளியீடு: புக்ஸ் ஃபார்சில்ரன்
தொடர்புக்கு: 044 24332924
சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை
பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை குறித்து வானொலி தொகுப்பாளினியான சின்ரன் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சீனப் பெண்களின் நிலை குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் இது.
ஆசிரியர்: சின்ரன்
தமிழில்: ஜி.விஜயபத்மா
விலை: ரூ. 280
எதிர் வெளியீடு , தொடர்புக்கு 98650 05084
வலி
பல்வேறு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நூல். இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கதைகள், நம்முடன் சக பயணியாக வரும் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகச் சொல்கின்றன.
ஆசிரியர்: அமரந்த்தா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை : ரூ. 110.
தொடர்புக்கு 044 24896979
சங்கப் பெண் கவிதைகள்
சங்கப் பெண் புலவர்கள் 45 பேர் எழுதிய கவிதைகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் இன்றைய நோக்கிலிருந்தும் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது இந்நூல்.
ஆசிரியர்: சக்தி ஜோதி
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ. 400
தொடர்புக்கு: 044 24896979
மெய்ப்பொய்கை
பாலியல் பெண்களின் துயரம்
இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களான பிரேம்சந்த், மன்ட்டோ, புதுமைப்பித்தன், அம்ருதா ப்ரீதம், இஸ்மத் சுக்தாய், கமலா தாஸ் எனப் பலருடைய சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடைய துயர்மிகு வாழ்வையும் இந்நூல் பதிவுசெய்கிறது.
தொகுப்பு: ருச்சிரா குப்தா
தமிழில்: சத்தியப்பிரியன்
வெளியீடு: கிழக்கு
விலை: ரூ.300
தொடர்புக்கு: 044 42009603
‘தி இந்து’ வெளியீடு
தடைகள் தாண்டிப்
பாயும் நதி
இந்தச் சமூகம் பெண்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்து வெளியேறும் பெண்கள் குறித்தும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
ஆசிரியர்: பிருந்தா சீனிவாசன்
வெளியீடு: தி இந்து
விலை: ரூ.120
தொடர்புக்கு: books@thehindutamil.co.in
பெண்களும் சோஷலிஸமும்
நம் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, பெண்கள் குறித்த விவாதம். பாலினச் சமத்துவம் இல்லாமல் மனித குலத்துக்கான விடுதலை சாத்தியமில்லை என இந்தப் புத்தகம் உரக்கச் சொல்கிறது.
ஆசிரியர்: ஆகஸ்டு பேபல்
தமிழில்: பேரா. ஹேமா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.380
தொடர்புக்கு: 044 24332424
எங்கிருந்து தொடங்குவது
ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்குள் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அ.வெண்ணிலா
வெளியீடு: அகநி
விலை: ரூ. 100
தொடர்புக்கு: 98426 37637
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT