Published : 22 Oct 2023 08:25 AM
Last Updated : 22 Oct 2023 08:25 AM
ஒருவரது பிறப்பு அவரது தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சாவித்ரிபாய் புலே தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகிய மூன்றையும் கல்வியே தரும் என்பதை உணர்ந்த அவர், ‘அனைவருக்கும் கல்வி’ என்பதில் உறுதியாக இருந்தார். 1848இல் இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி தொடங்கக் காரணமாக இருந்த அவர், 1853க்குள் மொத்தம் 18 பள்ளிகளைப் பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடங்கினார்.
பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் நவீனக் கல்விமுறை எப்படி இந்தியாவுக்குள் நுழைந்திருக்க முடியும்? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வணிகம் செய்ததோடு இந்தியாவை ஆளும் அதிகாரத்தையும் நிறுவிக்கொண்டிருந்த 1800களில் பிரிட்டிஷ் நிறுவனங்களில் அடிமட்ட பொறுப்பில் பணியாற்ற அவர்களுக்குக் குறைந்த கூலிக்கு ஆள்கள் தேவைப்பட்டனர். இந்தியர்களை அந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பொருட்டு கல்வி வழங்கும் வெளிநாட்டு மிஷனரிகளை இந்தியாவில் அனுமதித்தனர். பிரிட்டன் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, பிரெஞ்சு மிஷனரிகளும் அதில் அடக்கம். இந்தியச் சமூகச் சீர்த்திருத்தவாதிகள் அந்த வாய்ப்பைத் தங்கள் மக்களின் மறுமலர்ச்சிக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டனர். அதுவரை அவரவர் மதநூல்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டுவந்த நிலை மாறி நவீனக் கல்வி இந்தியர்களுக்குக் கிடைத்தது. அடித்தட்டு மக்களுக்குக் கல்வியைக் கொண்டுசேர்த்ததில் மகாத்மா ஜோதிராவ் புலே – சாவித்ரிபாய் தம்பதிக்குப் பெரும் பங்கு உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT