Published : 24 Sep 2023 07:36 AM
Last Updated : 24 Sep 2023 07:36 AM
‘பெண் எனும் போர்வாள்’ தொடரின் அறிமுகத்தைப் படித்ததுமே வினையாற்றி இருந்தார் வாசகர் ஒருவர். ‘இன்னும் எத்தனை காலம்தான் ஆணாதிக்கம் பற்றிப் பேசப் போகிறீர்கள்? குடும்ப உறவுகள் சிதைந்து தனி மரமானது யாரால்? குடும்பப் பெண்களால் அல்லவா? விண்ணிற்கும் பெண் போகலாம். விழுமியங்களை மீறக் கூடாது. ஆண்களால் குழந்தை பெற முடியாது. இருவரும் சமம் என்பது ஏட்டுச்சுரைக்காய். ஆணாதிக்கம் முற்றிலும் அகற்றப்படவில்லை என்பது உண்மைதான். தான்தோன்றித்தனம் அதற்கு விடையாகாது’ என்று அன்புடன் எழுதியிருந்தார். ‘இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க?’ என்பதற்குச் சற்றும் குறைவில்லாதது இது. ஒரு வாசகரின் கருத்தல்ல இது; பெரும்பாலான ஆண்களின் எண்ணமும் இதுவாக இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT