Published : 10 Sep 2023 07:02 AM
Last Updated : 10 Sep 2023 07:02 AM
குழந்தைகள் வளர்ப்பு பற்றிப் பேசுவதென்றால் கடல்போல விஷயங்கள் விரிந்துகொண்டே போகும். ஏனெனில், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்த நாம் வளர்ச்சி என்கிற பெயரில் நம் இயற்கைப் பயணத்தைவிட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். ஆனால், இன்றும் பிள்ளை வளர்ப்பிற்கு நாம் தகுதி அடைந்துவிட்டோமா என்கிற எண்ணம்கூட இல்லாமல் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.
இன்றைய பிள்ளைகள்தாம் நாளைய பெரியவர்கள். நாம் இறந்த பிறகு இந்த உலகில் இருப்பவர்களும் வழிநடத்திச் செல்பவர்களும் அவர்கள்தாம் என்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. இன்றைக்கான தீர்வு மட்டுமே நம் சிந்தனையில் வருகிறது. பிள்ளைகளின் எதிர்காலம் என்றால் அவர்களின் படிப்பு, வேலை, வருமானம், திருமணம், பிள்ளைப்பேறு என்று இவற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம். பிள்ளைகளின் மனம் என்கிற ஒன்றை நாம் எப்போதுமே கணக்கில் எடுப்பதில்லை. ஆனால், இதுதான் அவர்களின் மகிழ்வான, நிம்மதியான வாழ்வுக்கு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்போகும் பாதைக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை. ‘இதைப் பற்றியெல்லாம் எதற்குச் சிந்திக்க வேண்டும்? அவர்களது பாதையையும் தேர்ந்தெடுக்கப்போவது நாம்தானே’ என்கிற மிதப்பில் இருக்கிறோம்போல.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT