Published : 30 Jul 2023 07:23 AM
Last Updated : 30 Jul 2023 07:23 AM
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல் பெரும் வன்முறையாக மாறிக் கடந்த மூன்று மாதங்களாகப் பற்றி எரிகிறது. மனதைப் பதறவைக்கும் வன்முறை வெறியாட்டங்களுக்குப் பெண்கள் இரையாகிவருகின்றனர். மே 4ஆம் தேதி குகி பழங்குடிப் பெண்கள் இருவரை மெய்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற காட்சி சமூக ஊடகங்களில் 70 நாள்களுக்குப் பிறகு வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உலக அரங்கில் நம் நாட்டையே தலைகுனிய வைத்துள்ளது.
அதே நாளில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கார் சுத்தம் செய்யும் கடை யொன்றில் பணியாற்றிய குகி இனத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாகப் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளிட்டவை தன்னிச்சையான போராட்டங்களை முன்னெடுத்தன. பல்வேறு இடங்களில் போரட்டங்கள் தொடர்ந்துவருகின்றன. இப்போரட்டங்கள் மூலம் இவ்வமைப்புகள் பாதிக்கப்பட்டவர் சார்பாக நாங்கள் நிற்கிறோம் என்பதை அறிவிக்கின்றன. மேலும் நடந்த வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டிப்பது, நியாயம் கோருவது, அரசின் செயலற்ற நிலையைக் கேள்வி கேட்பது, அதன் நடவடிக்கைகளைத் துரிதமாக்குவது போன்ற பல்வேறு நோக்கங்களும் இப்போராட்டங்களுக்கு உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT