Published : 11 Jun 2023 08:37 AM
Last Updated : 11 Jun 2023 08:37 AM
தனக்கான இணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த பெண்ணுக்குக் கற்பு என்கிற இலக்கணம் வகுத்து நான்கு சுவருக்குள் அமரவைத்தாகிவிட்டது. அவள் தன் வாரிசுகள் பலசாலியாக, அறிவில் சிறந்தவராக இருக்க வேண்டி அப்படிப்பட்ட இணையர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தாள். தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே என்பதற்காக ஆணும் தன்னை அவள் எதிர்பார்ப்புக்கு இணங்க வடிவமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினான். ஆனால், அவள் உள்ளே அடைபட்ட பிறகு, அவளுக்கான உரிமைகள் அத்தனையும் பறிக்கப்பட்டன.
தந்தை கை காட்டும் மனிதருக்கு அவள் உடைமையானாள். அந்தத் தந்தையின் தேர்வுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தனக்கான லாப நோக்குகள் இருக்கலாம். இல்லை, பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தான் விடுபட அவளை எவனோ ஒருவனிடம் தாரை வார்த்துத் தரலாம். அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானித்தார். இதனால், ஆண்கள் வாழ்வு கொஞ்சம் சுலபமானது. தன் பலமோ, குணமோ, அறிவோ அவ்வளவு அவசியமாகப் பேணிக் காக்க வேண்டாத சூழலுக்குள் புகுந்தான். தனக்கான பெண்ணை அவன் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT