Published : 02 Sep 2017 10:44 AM
Last Updated : 02 Sep 2017 10:44 AM
அ
ழகான புன்னகைக்கு அழகான பற்கள் முக்கியம். அழகான பற்களுக்கு?
பல் சொத்தை, இன்று பலருக்குக் குடும்பச் சொத்துபோல ஆகிவிட்டது. சரியாகப் பல் துலக்காதது, இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிட்ட பின் வாயைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது, பல் துலக்காமல் இருப்பது போன்ற பல காரணங்களால் பல் சொத்தை ஏற்படுகிறது.
பற்சொத்தையின் முதல் படியாக கரும்புள்ளி தெரியும். பிறகு பல்லில் சிறு ஓட்டை விழும். பிறகு பல் வலி எடுக்கும். ஆரம்ப நிலையிலேயே பல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால், அடுத்து வரும் பாதிப்புக்களைத் தடுக்கலாம்.
இதுகுறித்து கோவையில் உள்ள பல் மருத்துவர் திவ்யா தரும் ஆலோசனைகள்:
பல் சொத்தைக்கு முக்கியக் காரணம் நாம சாப்பிடற உணவு பொருட்கள்ல இருக்கிற மாவுச்சத்துதான் (கார்போஹைட்ரேட்).
குழந்தைகளுக்கு ரொம்பச் சின்ன வயசுலயே பல் சொத்தையாவதற்குக் காரணம், இரவு நேரத்துல குழந்தைக்கு பாட்டிலில் பாலைக் கொடுத்துவிட்டு, பல தாய்மார்கள் தூங்கிடுறாங்க.
குழந்தைகள் ரொம்ப நேரம் பால் பாட்டிலை வாயிலேயே வெச்சுகிட்டு இருக்கிறதாலே, அவங்க வளர வளர அதுவே பல்லை பலவீனப்படுத்தி பல் சொத்தையாகக் காரணமாகிடுது.
பல்லின் வேர்வரை சொத்தை பரவி, பல் வலி அதிகமாகி, பல்லை அகற்றும் நிலை வரலாம். பல்லை அகற்றாமல், பல்வேர் சிகிச்சை (ரூட் கெனால்) முறை நிவாரணம் தரலாம். பல்வேர் சிகிச்சை செய்யப்பட்ட பல்லுக்கு ‘செராமிக் கேப்’ போடுவார்கள்.
வேர் சிகிச்சை செய்த பல்லின் மூலம் கடினமான உணவுப் பொருட்களை கடிக்காமல் பாத்துக்கொண்டால் போதும். அழகான பற்கள் கேரண்டி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT