Published : 24 Dec 2016 11:34 AM
Last Updated : 24 Dec 2016 11:34 AM

ஊட்டச்சத்தை கிரகிக்க உதவும் நெல்லி

துவர்ப்புச் சுவை மிகுந்தது பெருநெல்லிக் காய். மற்ற காய்களை விடவும் சிறிதாக இருந்தாலும் இந்தக் காய் சத்து நிறைந்தது. விலை மலிவாகவும் கிடைக்கும் இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

பெருநெல்லிக் காய் தரும் பலன்கள் என்ன?

> பெருநெல்லிக்காயை ஊறுகாயாகவோ, உப்பு வைத்தோ சாப்பிடுவதைக் காட்டிலும், தனியாகச் சாப்பிடுவதே சிறந்தது. தனியாகச் சாப்பிட விரும்பாத பட்சத்தில் சாலட், சட்னி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.

> பெருநெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.

> உணவு செரிமானம் அடையப் பெருநெல்லிக்காய் உதவுகிறது. ஊட்டச்சத்துகளை உட்கிரகிக்கவும், உடல் அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளவும் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

> நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள், சிறுநீர் வழியாக வெளியேற உதவுகிறது.

> மாதவிடாய் தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைப்பதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x