Last Updated : 05 Nov, 2016 12:21 PM

 

Published : 05 Nov 2016 12:21 PM
Last Updated : 05 Nov 2016 12:21 PM

4 நல்ல வார்த்தை: தோல் தரும் நன்மைகள்

> உருளைக் கிழங்கின் தோலைச் சீவிவிட்டே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மண்ணுக்குள் விளையும் இந்தக் கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டுத் தோலுடன் பயன்படுத்துவதே நல்லது. உருளை தோல் தரும் ஆரோக்கியப் பலன்கள்:

> உருளைக் கிழங்குத் தோலில் பொட்டாசியம் அதிகம். இது உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

> தோலில் உள்ள நார்ச்சத்து ரத்தக் கொலஸ்ட்ரால் அளவை குறைத்துச் செரிமானத் திறனை அதிகரிக்கிறது.

> தோலில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு நன்மை தரும் செரடோனின், டோபமைன் சுரப்புகளைத் தூண்டுகிறது.

> உருளைக்கிழங்குத் தோலில் வைட்டமின் சி, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகளும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x