Published : 05 Dec 2015 04:58 PM
Last Updated : 05 Dec 2015 04:58 PM

நலம் நலமறிய ஆவல்

வாசகர்களின் கேள்விகளுக்கு இந்த வாரம் பதில் அளிக்கிறார் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ்:

என் வயது 25, உயரம் 172 செ.மீ., எடை 55 கிலோ. எனது உயரத்துக்கான சரியான எடை 67 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நான் மிகவும் ஒல்லியாகக் கன்னங்கள் ஒட்டி, எலும்பும் தோலுமாக உள்ளேன். உடல் எடையை அதிகரிக்கப் பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. உடல் எடையை அதிகரிக்க வழி கூற முடியுமா?

- கவி அருண், மின்னஞ்சல்

ஒல்லியான தேகம் குறித்து வருத்தப்பட்டு எழுதியுள்ளீர்கள். ஒல்லியான ஒட்டிய கன்னங்கள், நெஞ்சு எலும்பு தெரியும்படியான உடல் அமைப்பு எப்படி வந்திருக்கும்?

பரம்பரையாகவும் மொத்த ஊட்டச்சத்து குறைபாட்டாலும் உடலின் நாளமில்லா சுரப்பிகளின் மிகை, குறைவினாலும், ஓய்வில்லா உடல் உழைப்பாலும், மன உளைச்சலாலும், சரியான உறக்கம் இல்லாததாலும் இதுபோன்ற உடல் அமைப்பு அமையலாம்.

அஸ்வகந்தா சூரண மாத்திரை, அஸ்வகந்தி லேகியம், நவதானியச் சத்துமாவு மற்றும் சரியான நேரத்தில் சத்தான உணவு, உடலுக்குத் தகுந்த உழைப்பு, உழைப்புக்குத் தகுந்த ஓய்வு, மனமகிழ்ச்சி போன்றவற்றால் உடலைத் தேற்றமுடியும்.

‘இளைத்தவனுக்கு எள்ளு' என்னும் பழமொழிக்கு ஏற்ப உணவை மருந்தாக எண்ணிச் சாப்பிட்டு, சித்த மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் உடலும் உள்ளமும் உறுதி பெறும், பலம் பெறும்.

நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல்,

நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x