Published : 19 Dec 2015 12:26 PM
Last Updated : 19 Dec 2015 12:26 PM
நம்மூரில் சாதாரணமாகக் கிடைத்தும், பிரபலமில்லாத பழங்களில் ஒன்று சப்போட்டா. அதை வேண்டாம் என்று ஒதுக்கும் முன், கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துவிட்டு முடிவு செய்யலாமே:
# சப்போட்டாவில் இயற்கை நார்ச்சத்து அதிகம்.
# வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
# வீக்கத்தை ஏற்படுத்தும் நோய்களுக்குச் சிகிச்சை தர சப்போட்டா இலைகள் பயன்படுகின்றன.
# ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும் சிறந்த பண்புகள் சப்போட்டாவில் உள்ளன.
# இந்தப் பழத்தில் உள்ள எளிமையான சர்க்கரைப் பொருட்கள் இயற்கை சக்தியைத் தூண்டிவிட்டு உடலுக்குப் புத்துணர்வைத் தரும்.
- நேயா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT