Published : 18 Jan 2020 10:29 AM
Last Updated : 18 Jan 2020 10:29 AM
போப்பு
இந்து தமிழ் திசை பதிப்பகம்
‘காயமே இது மெய்யடா’ என்ற இந்தத் தொடர் ‘இந்து தமிழ்’ நலம் வாழ இணைப்பிதழில் வெளியானபோது பரவலான வரவேற்பைப் பெற்றது. பிரபல உடல் நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றைத் திரும்ப நமக்கு நினைவூட்டியிருக்கிறார்.
நம் உடலின் முதன்மை உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி ஆகியவற்றை இந்தப் புத்தகம் விரிவாக விளக்கிச் சொல்கிறது.
ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. இந்தக் காலத்தில் பலரும் பொருள் தேடி ஓடுகிற அளவுக்கு, உடம்பைப் பேணுவதில்லை. உடல் என்ற அடிப்படை சொத்தைச் சீர்படுத்த வேண்டியதன் அவசியத்தை வாசிப்பவருக்கு இந்த நூல் உணர்த்தும்.
சென்னை புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை' அரங்கில் (133, 134) இந்தப் புத்தகம் கிடைக்கும்.
தொடர்புக்கு: 74012 96562
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT