Published : 23 Nov 2019 10:41 AM
Last Updated : 23 Nov 2019 10:41 AM

டெங்குவை விரட்டும் மூலிகை மருத்துவம்

க. வேங்டேசன்

தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் போல் ஆண்டுதோறும் செப்டம்பர் தொடங்கி ஜனவரி முடிய சில ஆண்டுகளாகத் தமிழக மக்களைப் புரட்டிப் போடுகின்ற ஒரு நோய் ‘டெங்கு காய்ச்சல்’.

1970-களிலேயே இந்தக் காய்ச்சல் பேசப்பட்டாலும் 2000-ல் தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட விஷக் காய்ச்சல்கள் தொன்றுதொட்டே மக்களை வாட்டி வதைத்து வருவதையும் அதைத் தடுக்கவும், தீர்க்கவும் பல்வேறு மருந்துகளைச் சித்தர்கள் கண்டறிந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் உணவு முறையிலும் பழக்கவழக்கங்களிலும், சிகிச்சை முறையிலும் கலந்துவிட்டதைச் சித்த மருத்துவம் பயின்றவர்கள் நன்கு அறிவர்.

நிலவேம்பு ஸ்பிரே

2006 - 2007-ல் நான் அறிமுகப்படுத்திய ‘நிலவேம்புக் குடிநீர்’ இன்று டெங்கு காய்ச்சலுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது என்பது அனுபவ உண்மையாகி உள்ளது. நிலவேம்பு கஷாயத்தைக் கொசு பரவும், உற்பத்தியாகும் இடத்தின் மீது ‘ஸ்பிரே’ செய்தாலே போதும்.

டெங்குக் காய்ச்சலை உண்டாக்கும் கொசு உற்பத்தி குறையும். நிலவேம்பு, மலைவேம்பு, மா இலை, நொச்சியிலை ஆகியவற்றையெல்லாம் கஷாயம் செய்து மனிதர்கள் குடிப்பது போல், கொசு உற்பத்தியாகும் இடம் மீது ‘ஸ்பிரே’ செய்தால் கொசு உற்பத்தி கணிசமான அளவு குறையும். அதேபோல், வேப்பெண்ணெய்யில் லெமன் கிராஸ் தைலம் கலந்து ஸ்பிரே செய்தாலும் கொசுக்கள் பரவாது.

டெங்குவைத் தடுக்கும் முறைகள்

உடம்பின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதுதான் இந்தக் காய்ச்சலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரே வழி. கீழ்க்காணும் தடுப்பு முறைகள் டெங்கு காய்ச்சல் வராமல் காக்கும். இதன் அடிப்படை, நோய் எதிர்ப்பு ஆற்றலை ரத்தத்தில் அதிகபட்சமாக வலுப்படுத்திக்கொண்டால் நம்மைக் கொசு கடித்தாலும் கிருமி இறந்துவிடும்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மூலிகைகள்

அதாவது நிலவேம்பு, மலைவேம்பு, வில்வம், அறுகம்புல், சீந்தில், நெல்லி, மஞ்சள், கண்டங்கத்தரி, சுக்கு, மிளகு, பற்பாடகம், விஷ்ணுகரந்தை, கோரைக்கிழங்கு, சந்தனம், சித்தாமுட்டி, சித்திரமூலம், தாமரை போன்ற மூலிகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே போதும். இவை நோய் எதிர்ப்பு ஆற்றலை உச்ச கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இவை அனைத்தும் பக்கவிளைவு தராத நல்ல மூலிகைகள். நம் அதிர்ஷ்டம் இவை நகர வாழ்க்கையில் மறைந்தாலும் கிராம மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றன.

இந்த மருந்துகள் எங்கே கிடைக்கும்?

மேற்கண்ட மூலிகைகளை எமது ‘கண்ணப்பர் மூலிகைப் பூங்கா’வில் வளர்த்துப் பதப்படுத்தி 500 மில்லி கிராம் காப்சூல்களாக விநியோகிக்கிறோம். அடையாறில் இந்திய மருத்துவ உற்பத்தி சங்கத்திலும் (Impcops) இந்த மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: mooligaimani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x