Published : 08 Apr 2014 12:08 PM
Last Updated : 08 Apr 2014 12:08 PM

கணினி நோய்களைத் தடுக்க...

இப்போது எந்த வேலையாக இருந்தாலும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள் உடல்நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை:

# கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.

# கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது.

# 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.

# அதற்கு சாத்தியமில்லாதவர்கள். உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி, அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம் இரண்டு நிமிடங்கள் ஒய்வு கொடுக்கலாம். கண்கள் பாதிக்கப்படாதபடி இது ஓரளவு காப்பாற்றும்.

# பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும், உடலையும் நீட்டி, மடக்கிக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம்.

# கணினியில் தட்டச்சு செய்யும்போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பது அவசியம். அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்தால் உடல் வலியைக் குறைக்கலாம்.

# பாதங்களைத் தரை மீது சமமாக வைத்திருக்க வேண்டும். உடலின் மொத்த எடையையும் பாதம் தாங்குவதால், பாதத்தைச் சமமாக வைத்திருப்பது அவசியம்.

# தட்டச்சு செய்யும்போது முழங்கைகளை இடையின் பக்கத்தில் வைத்திருப்பது, கைகளுக்கு ஆதரவாக இருக்கும். தோள்பட்டை வலியும் குறையும்.

- தெ. கார்த்திக், காரணம்பேட்டை, திருப்பூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x