Published : 07 Jan 2017 10:31 AM
Last Updated : 07 Jan 2017 10:31 AM
‘My Fitnesspal' ஆன்றாய்ட் ஆப் இருந்தால், எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி எளிமையாக உடல் எடையைக் குறைத்துவிடலாம். இந்த 'ஆப்'பில் 6,00,000 உணவுகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன. அதனால் எளிமையாக நாம் உட்கொள்ளும் கலோரிகளைக் கணக்கிடலாம். அது மட்டுமல்லாமல் நாம் எத்தனை அடிகள் நடக்கிறோம் அதன் மூலம் எத்தனை கலோரிகள் செலவழித்தோம் எனபது போன்ற விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். Fitbit, Run keeper போன்ற 50க்கும் மேற்பட்ட 'ஆப்'கள் மற்றும் கருவிகளுடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இணையதளத்திலிருந்து நமக்குத் தேவையான சமையல் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து இதில் சேமித்து வைக்கலாம். மேலும் இந்த ‘ஆப்'-லேயே பிளாக் (Blog) வசதி உள்ளது. அதில் நிறைய ஆரோக்கியமான உணவுகளின் செய்முறை விளக்கங்கள், உணவுகளைப் பற்றிய கட்டுரைகள், அந்த உணவுகளில் உள்ள ஊட்டசத்துக்கள் பற்றிய தகவல்கள் என அனைத்தும் உள்ளன. மேலும் அந்த பிளாகில் உடற்பயிற்ச்சி பற்றிய கட்டுரைகள், உடல் ஆரோக்கியம் சம்பந்தமான கட்டுரைகள், உடல் எடை குறைப்பதற்கான ஆரோக்கியமான உணவு வகைகளும் உள்ளன.
இந்த 'ஆப்' உபயோகப்படுத்துவது மிகவும் எளிது இதை டவுன்லோட் செய்து அதில் நம் உடல் எடை, வயது, பாலினம் போன்ற நம்மைப் பற்றிய குறிப்புகளை பதிந்துவிட்டால் போதும். அதுவே நமக்குத் தேவையான உணவு முறை, நாம் பின்பற்ற வேண்டிய உடல் பயிற்சி ஆகிய தகவல்களை நமக்கு அளித்துவிடும். இதைப் பயன்படுத்தி நாம் எவ்வளவு எடை குறைத்துள்ளோம் என்பதை அறிய க்ராப் (Graph) வசதியும் உள்ளது. நாம் வாங்கும் உணவுப் பொருளடங்கிய உறைகளில் உள்ள பார்கோடை (barcode) ஸ்கேன் செய்து அந்த உணவு பற்றிய தகவல்களைப் பெறும் வசதியும் உள்ளது. இந்த 'ஆப்' உபயோகப்படுத்தும் சக நண்பர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் ஒரு சமூகக் குழுவும் (Community) உள்ளது. நண்பர்களுடன் இணைந்து ஒருவருக்கொருவர் ஊக்குவித்து உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஒவ்வொரு வேளையும் நேரம் தவறாமல் சாப்பிடுவதற்கு ரிமைன்டர் (Remainder) செட் செய்து வைக்கும் வசதியும் உள்ளது.
உலகில் உள்ள பல வகை உணவுகளின் தகவல்கள், உடற்பயிற்சிக் குறிப்புகள், ஆரோக்கியக் குறிப்புகள் என அனைத்தும் இந்தக் கையடக்க ‘ஆப்'-ல் உள்ளன.
- விஜயஷாலினி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT