Published : 31 Jan 2014 01:15 PM
Last Updated : 31 Jan 2014 01:15 PM
புற்றுநோய் வகைகளை கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி.யில் ரூ.32 கோடி செலவில் தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கி தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்காக இதுபோன்ற திசு வங்கி அமைக்கப்பட்டிருப்பது நாட்டில் இதுவே முதல்முறை ஆகும்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும் சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து ரூ.32 கோடி செலவில் தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கியை தொடங்கியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ரூ.27.81 கோடியும், ஐ.ஐ.டி. தனது பங்காக ரூ.3.9 கோடியும் வழங்கியுள்ளன.
சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக 10 ஆயிரம் சதுர அடி கட்டிடத்தை ஐ.ஐ.டி. அளித்திருக்கிறது. இந்த வங்கியில் 25 ஆயிரம் புற்றுநோய் திசு மாதிரிகளை சேகரிக்க முடியும். புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. அவற்றை கண்டறியவும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்கவும் இந்த திசு வங்கி பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
சர்வதேச மாநாடு
இந்த உயிரி வங்கி திட்டத்தை சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளையுடன் இணைந்து ஐ.ஐ.டி. மேற்கொண்டுள்ளது. புற்றுநோய் திசு மாதிரிகளை தான மாக பெறும் வகையில் பல்வேறு மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வங்கி செயல் படும். அதோடு கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபடும் என்று ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
புற்றுநோய் உயிரியல் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு, ஐ.ஐ.டி.யில் ஜன. 30-ம் தேதி தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஐ.ஐ.டி. உயிரி தொழில்நுட்பத் துறையும், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், பொதுவான புற்றுநோய்களைக் கண்டறிவது, சிகிச்சை அளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
500 பிரதிநிதிகள் பங்கேற்பு
சொற்பொழிவுகள், செயல்விளக் கங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ் திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 500 மருத்துவ நிபுணர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப் படுகின்றன.
புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. அவற்றை கண்டறியவும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்கவும் இந்த திசு வங்கி பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment