Last Updated : 29 Sep, 2018 11:34 AM

 

Published : 29 Sep 2018 11:34 AM
Last Updated : 29 Sep 2018 11:34 AM

உமிழ்நீரே அமிர்தம்!

கடந்த 16-ம் தேதி, 96 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன். உடல் நலம், மனநலம் பற்றி இயல்பாகத் தனது பிறந்தநாளில் நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அனைவருக்கும் பயனளிக்கும்.

நலத்துடன் வாழ அவர் சொன்ன அறிவுரைகளில் சில...

# “உடம்பு சொல்படி கேட்டு நடக்கப் பழகிக்கணும். உடம்பு தனக்குத் தேவையானதைச் சொல்லும். தும்மல், விக்கல், உடல் உபாதைகளை அடக்காதீங்க.

# தூக்கம் வரும் நேரத்தைச் சொல்ல முடி யாது. உடம்பு தூக்கம் வேணும்னு சொன்னதைக் கேட்காம வாகனத்தை ஓட்டினா விபத்துதான். நான் தூக்க மாத்திரை சாப்பிட்டதில்லை. உடம்பைக் கெடுத்துரும். ‘தூக்கம் வராட்டி என்ன பண்ணுவீங்க?’ன்னு கேட்பாங்க. நான் சும்மா இருப்பேன். தானா வரும்.

# வயசு ஆக, ஆக சில விஷயங்களை எளிமையாக்கிக்கணும். சில விஷயங்களைக் குறைச்சுக்கணும். ஜாதகத்தை வெச்சு வயசு கிடையாது. உணவில்தான் அனைத்தும் இருக்கு.

# கல்யாணத்துக்குப் போயிட்டு பந்தியில அவசர, அவசரமாச் சாப்பிட்டுட்டு ஓடுறாங்க. ஏன் அவ்வளவு அவசரம்? அது ஆயுசைக் குறைக்கும். சாப்பாட்டை மெதுவா நல்லா மென்று சாப்பிடணும். அதுக்குதான் பல் இருக்கு. சாப்பாட்டை நன்றாக மென்று சாப்பிட்டால்தான் உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரே அமிர்தம். ஆயுள் அதிகரிக்கும். கிராமத்திலே உடலில் புண் வந்தால் உமிழ்நீரை எடுத்து வைக்கச் சொல்வாங்க.

# உண்மையை யோசிக்கணும். மனம் விட்டுப் பேசணும். நண்பர்களோடு சந்தோஷமாப் பேசுங்க. எல்லாம் நல்லாயிருக்கும்!”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x