Last Updated : 22 Jun, 2019 01:03 PM

 

Published : 22 Jun 2019 01:03 PM
Last Updated : 22 Jun 2019 01:03 PM

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்

அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவை உட்கொள்வதே இதய நோய்கள் பெருகுவதற்குக் காரணம். கொழுப்புச்சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம்செலுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சரியான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கொழுப்புச் சத்தைக் குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு உதவுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் வசிக்கும் மக்களிடம் இதய நோய் பிரச்சினைகள் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெங்காயம்

கொழுப்பின் அளவைக் குறைப்பதில், வெங்காயம் முக்கியப் பங்குவகிக்கிறது. வெங்காயத்தில் இருக்கும் குவர்செடின் (Quercetin) என்ற நிறமி, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகச் செயல்படுகிறது. இது கொழுப்புச்சத்து ரத்தக் குழாய்களை அடைப்பதைத் தடுக்கிறது.

பச்சை வெங்காயத்தைவிட, சமைக்கப்பட்ட உணவில் பயன்படுத்தப்படும் வெங்காயம், ரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெங்காயத்தைப் போன்றே பூண்டிலும் ரத்தத்திலிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. வெங்காயமும் பூண்டும் ஆரோக் கிய மான  ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும்.

பீன்ஸ்

பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை, பருப்பு வகை போன்றவை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. ஒரு நாளில் ஒரு முறை, இவற்றில் ஏதாவது ஒன்றை உட்கொள்வது, ஆறு வாரங்களுக்குக் கெட்ட கொழுப்புச்சத்தை 5 சதவீதம் குறைப்பதாக கனடாவின் மருத்துவ இதழ் தெரிவிக்கிறது. பீன்ஸ், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கொழுப்பைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஞ்சள்

ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு, மஞ்சளும் உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க காரணமாக இருக்கிறது.

பாதாம்

பாதாமில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும். ஆறு வாரங்களுக்கு அன்றாடம் பாதாம் சாப்பிட்டுவந்தவர்களுக்கு நல்ல கொழுப்புச்சத்து அதிகரித்திருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

வெண்ணெய்

வெண்ணெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் இருப்பதால், ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கிடைக்க உதவுகிறது. அளவாக எடுத்துகொண்டால், ஆலிவ் எண்ணெய்யைப் போன்று வெண்ணெய்யும் நல்ல கொழுப்பைப் பெறுவதற்குச் சிறந்த வழி.

சாக்லேட்

சாக்லேட்டிலும் வீக்கத்தைக் குறைக்கும் ஆக்ஸிஜ னேற்றச் சேர்மங்கள் இருக்கின்றன. அது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு வழிவகுக்கிறது. நான்கு வாரங்களுக்குத் தினமும்  சாக்லேட் சாப்பிட்டவர்களின் ரத்தக் கொழுப்பு நான்கு சதவீதம் குறைந்திருப்பது ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x