Published : 17 Mar 2018 10:36 AM
Last Updated : 17 Mar 2018 10:36 AM
மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
வாழ்க்கை அணுகுமுறையை நீங்கள் மாற்றுவது அவசியம். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஏழாயிரம் பேரைத் தொடர்ந்து ஆய்வுசெய்ததில் நேர்மறை உணர்வுநிலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியம் 73 சதவீதம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
படி இறங்கும்போது நம் மூட்டின் மீது என்ன தாக்கம் ஏற்படுகிறது?
ஒவ்வொரு முறை படிகளில் இறங்கும்போதும் நமது உடல் எடையைவிட ஆறு மடங்கு வலுவை நமது மூட்டுகள் தாங்குகின்றன. அதனால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதைத் தவிர்க்க, கூடுதல் எடைபோடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பெரியவர்களைவிடக் குழந்தைகளின் கற்கும் திறன் எவ்வளவு அதிகமாக உள்ளது?
ஒரு நாளில் பெரியவர்கள் கற்றுக்கொள்வதைவிடக் குழந்தைகள் 25 மடங்கு அதிகம் கற்றுக்கொள்கின்றனர். நாம் நமது மூளைத்திறனில் 25 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக ஐன்ஸ்டைன் கூறினார். ஆனால், உண்மையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.
மருந்து இல்லாமல் படபடப்பைத் தணிக்க முடியுமா?
தற்கண உணர்வுநிலைத் தியானம் (மைண்ட்ஃபுல் மெடிட்டேஷன்) மிகவும் உதவியாக இருப்பதாக அமெரிக்காவின் ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆப் ஹெல்த்’ அமைப்பு தெரிவித்துள்ளது. தற்கண உணர்வுநிலைத் தியானத்தால் கவனம் கூர்மையாகும். வலியைத் தாங்க இயலும். சிகரெட், மது போன்ற போதைகளிலிருந்து மீளவும் இந்த தியானம் உதவுகிறது. ரத்த அழுத்தம் சீர்படும். படபடப்பு காணாமல் போகும்.
எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்குமா? குறையுமா?
உடல் பருமன் குறைபாடு உலகம் முழுவதும் அதிகரிக்கும் நிலையில் புற்றுநோயும் அதிகரிக்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆண், பெண் என இரண்டு பாலினத்தவரில் ஆண்களைவிட பெண்களை புற்றுநோய் பாதிப்பது ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். உலகளவில் தற்போது மூன்று பெரியவர்களில் இரண்டு பேர் உடல் பருமனாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT