Published : 29 Dec 2018 11:40 AM
Last Updated : 29 Dec 2018 11:40 AM
இயர்போன்களால் ஆபத்து?
நீண்ட நேரத்துக்கு ‘இயர்போன்’களைப் பயன்படுத்துவதால் காதுகளின் கேட்கும் திறன் குறைவதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துச் சங்கத்தின் இதழில் வெளியான இந்த ஆய்வில், நீண்ட நேரம் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இயர்போன் பயன்படுத்தும்போது, 60 – 85 டெசிபல் அளவில்தான் ஒலியளவு இருக்க வேண்டும். 100 டெசிபெல்லில் 15 நிமிடங்களுக்குமேல் இயர்போன் பயன்படுத்தினால், அது செவித் திறன் இழப்பை ஏற்படுத்தும். எனவே, இயர்போன் பயன்படுத்தும்போது, 60 சதவீத ஒலியளவுக்குமேல் பயன்படுத்த வேண்டாம். அத்துடன் இயர்போன் பயன்படுத்தும்போது, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவெளி விட வேண்டும் என்றும் என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர் .
டிஜிட்டல் உலகின் குழந்தைகள்
திரைக்கு முன் அதிகமான நேரத்தைச் செலவிடும் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார மையம் (National Institute of Health) நடத்திக்கொண்டிருக்கும் ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏழு மணி நேரத்தை ஸ்மார்ட் போனிலோ ‘வீடியோ கேம்'ஸிலோ செலவிடும் 9-10 வயது வரையுள்ள குழந்தைகளின் மூளையின் வெளிப்புற அடுக்கு பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தைத் திரைக்கு முன்னால் செலவிடும் குழந்தைகள் மொழி, பகுத்தறியும் தேர்வுகளில் குறைவாகவே திறனை வெளிப்படுத்தி யிருக்கின்றனர். 18 – 24 மாதங்கள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் டிஜிட்டல் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு இந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT