Published : 22 Nov 2018 07:14 PM
Last Updated : 22 Nov 2018 07:14 PM
நிமிர்ந்து நேராக நடப்பவர்களை விட பின்னோக்கி நடப்பவர்கள் ஞாபகத்திறனுக்கான பரிசோதனைகளில் திறம்படச் செயல்பட்டுள்ளார்கள்.
ரோஹாம்ப்டன் பல்கலையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். 114 தன்னார்வலர்களை ஒரு வீடியோ பார்க்க வைத்து, அதிலிருந்து அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
வீடியோவைப் பார்த்த பின் இந்தக் குழு பிரிக்கப்பட்டது. ஒரு சிலர் முன்னோக்கி நடக்க வைக்கப்பட்டனர். சிலர் பின்னோக்கி நடக்க வைக்கப்பட்டனர். சிலர் ஒரே இடத்தில் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரிடமும் பார்த்த வீடியோ குறித்து 20 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், பின்னோக்கி நடப்பவர்கள், சராசரியில் மற்றவர்களை விட கூடுதலாக இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னது தெரிந்தது.
அடுத்து, ஒரு பட்டியலில் இருக்கும் வார்த்தைகளில் எவ்வளவு வார்த்தைகளை நினைவுகூர முடிகிறது என்பது பரிசோதிக்கப்பட்டது. இதிலும் பின்னோக்கி நடப்பவர்களே சரியான விடைகளை அதிகமாகத் தந்தனர்.
நமது நடைக்கும், ஞாபகத்திறனுக்கும் எப்படி பிணைப்பு இருக்கிறது என்பது தெளிவாகவில்லை என்றாலும், மேற்கொண்டு ஆய்வு செய்தால் இதை மனிதர்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்த முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT