Published : 21 Dec 2024 06:18 AM
Last Updated : 21 Dec 2024 06:18 AM
இந்த வாரம், நல்ல கொலஸ்டிரால் (HDL) குறித்துப் பார்க்கலாம். இதை ‘அதிக அடர்த்திக் கொழுப்புப் புரதம்’ (High Density Lipoprotein – HDL) என்று அழைப்பதைவிட, ‘ஆரோக்கிய கொழுப்புப் புரதம்’ (Healthy Density Lipoprotein – HDL) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
என்ன காரணம்? - நல்ல கொலஸ் டிராலில் புரதம் தான் அதிகம். கொலஸ்டிரால் பங்கு இதில் குறைவு. ரத்தக்குழாயை அடைக்கும் பொருள் கள் இதில் இல்லை என்பது இதன் தனித்தன்மை. பொதுவாக, ரத்தக்குழாய் செல்களில் உள்ள ஆக்ஸிஜனோடு கொலஸ்டிரால் இணையும்போதுதான் (Oxidation) செல்களில் உள்காயங்கள் (Intimal Injuries) ஏற்படும். இது மாரடைப்புக்குப் பாதை போடும். இம்மாதிரியான ‘எதிரணி வேலைகளை’ நல்ல கொலஸ் டிரால் செய்வதில்லை. இதனால், நல்ல கொலஸ்டிரால் இதயத்துக்குத் தோழனாகிவிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT