Last Updated : 19 May, 2018 11:40 AM

 

Published : 19 May 2018 11:40 AM
Last Updated : 19 May 2018 11:40 AM

எல்லா நலமும் பெற: சாக்லேட் இதயத்துக்கு நல்லது!

முழுமையான உணவு என்பது என்ன?

இயற்கையாக வேட்டையாடி, சேகரித்து, தோண்டி எடுத்து, பறித்து எடுக்கும் உணவெல்லாமே முழுமையான உணவுதான். அதே நேரம், தொழிற்சாலையிலிருந்து வரும் பதப்படுத்தப்பட்ட உணவு எதுவுமே முழுமையான உணவு அல்ல. முழுமையான உணவு என்பது இயற்கையில் தூய்மையாகவும் இருக்கும்.

சாக்லேட் சாப்பிடுவது இதய நோயைத் தவிர்க்குமா?

‘எபிக் – நார்ஃபாக்’ எனும் அமைப்பு, 21 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், சாக்லேட் சாப்பிடுவது இதய நோயைத் தவிர்க்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தினசரி 99 கிராம்வரை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு (மில்க் சாக்லேட்) இதய நோயால் இறக்கும் சாத்தியம் 45 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்துடன் இருக்க நான் என்னென்ன செய்ய வேண்டும்?

தினசரி அனைத்து சத்துகளும் இருக்கும் உணவையே சாப்பிட முயல வேண்டும். அன்றாடம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியில் 30 நிமிடங்கள் ஈடுபட வேண்டும். அன்றாட வேலை நெருக்கடிகளைச் சரியாக நிர்வகித்து, போதுமான உறக்கத்தை உடலுக்குத் தருவது அவசியம். ஆரோக்கியமான உறவுகளும் உடலை மேம்படுத்தும்.

இதய நோய்க்கும் உயரத்துக்கும் தொடர்பு உண்டா?

உயரம் குறையக் குறைய இதய நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகிறது. ஒவ்வொரு 2.5 அங்குல உயரக் குறைவும் 13.5 சதவீதம், இதய நோய் சாத்தியத்தை அதிகரிக்கிறது. ஐந்து அடி ஆறு அங்குல உயரம் கொண்டவர்களைவிட ஐந்து அடி உள்ளவர் கூடுதல் இதய நோய் தாக்கும் சாத்தியத்தைக் கொண்டவராக உள்ளார்.

நகம் கடிக்கும் பழக்கம் சிலருக்கு அதிகமாக உள்ளதே?

அதிகமாக நகம் கடிக்கும் பழக்கம், அறிவியல்ரீதியாக ‘ஓனிகோபேகியா’ (onychophagia) என்று அழைக்கப்படுகிறது. அலுப்பு, நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம் காரணமாக இந்தப் பழக்கம் ஏற்படுகிறது. அதிகமாக நகம் கடிப்பவர்கள் நகத்தில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவற்றால் தொற்றுக்கு உள்ளாகலாம். நகம் கடிக்கும் பழக்கத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று பாகுபாடு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x