Published : 20 Jan 2018 11:14 AM
Last Updated : 20 Jan 2018 11:14 AM
கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் எவை?
கண்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கும் காய்கறியான கேரட்டில் ‘விழிப்புள்ளிச் சிதைவை’ தடுக்கும் பீட்டா- கரோட்டின் உள்ளது. பச்சைக் காய்கறிகள், கீரைகளில் விழிப்புள்ளிச் சிதைவைத் தவிர்க்கும் சத்துகள் உள்ளன.
வாழைப்பழத் தோல் சாப்பிடுவதற்கு உரியதா?
பழத்தோலைச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது. பல நாடுகளில் வாழைப்பழத் தோலை உண்ணும் பழக்கம் இருக்கிறது. வாழைப்பழத் தோலில் பொட்டாசியமும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. கண்களைப் பாதுகாக்கும் லுட்டின் (lutein) சத்தும் உள்ளது. மனநிலையை மேம்படுத்தும் அமினோ அமிலமான டிரிப்டோபானும் உள்ளது.
மலச்சிக்கலை இலகுவாக்கும் உணவு வகைகள் எவை?
ஆப்பிள், பேரிக்காய் சாப்பிட்டால் லேசாகும். திராட்சைக்கும் அந்தத் தன்மை உண்டு. வெந்நீரில் எலுமிச்தை சாறு கலந்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தலாம். பச்சைக்கீரையை வெறுமனே மென்று தின்பதும் பலனை அளிக்கும்.
மூட்டு வலியைக் குறைப்பதற்கு இயற்கை மருந்து உள்ளதா?
கடைகளில் கிடைக்கும் ஆங்கில மருந்துக் களிம்பைவிட, அதிக செயல்திறன் கொண்ட மருந்தாக மஞ்சள் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எட்டு வாரங்களுக்குப் பிறகு 60 சதவீதம் வலி குறைவது தெரியவந்துள்ளது.
தினசரி உடற்பயிற்சிக்கு எப்படி ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்?
முதலில் முடிந்தவரை குறைவான, உங்களால் இயன்ற நேரத்தை தினசரி ஒதுக்கிக்கொள்ளுங்கள். காலை நேரம் 20 அல்லது 30 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்யலாம். அதிகாலையில்தான் தொடங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவையில்லை. நண்பர் யாருடனாவது சேர்ந்து உடற்பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தால் கூடுதல் ஊக்கமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT