Published : 19 Aug 2023 06:10 AM
Last Updated : 19 Aug 2023 06:10 AM
மனநலம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அவ்வப்போது மனநலத்தில் சில தடுமாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும். இது இயல்பானதுதான். ஆனால், இந்தத் தடுமாற்றங்களைத் தொடர்ந்து வரும் சில அறிகுறிகள் அடிக்கடி மன அழுத்தத்தை ஏற்படுத்தி, நமது செயல்திறனைப் பாதிக்கும்போது அது மனநோயாக மாறுகிறது. மன அழுத்தத்துக்கும் மனநோய்க்கும் இடையிலான உறவு சிக்கலானது. அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம் மனநோய்க்குக் காரணமாக அமைவதுடன், அதன் தாக்கத்தையும் தீவிரமடையச் செய்கிறது.
மனநோய்கள் அல்லது மனநலக் கோளாறுகள் என்பவை பரந்த அளவில் மனத்தின் பல்வேறு நிலைமைகளைக் குறிக்கின்றன. இது பாதிக்கப்பட்ட நபரின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மனச்சோர்வு, அதீத பயம், பதற்றம், கவலை, மனச் சிதைவு உள்ளிட்டவை மனநலக் கோளாறுகளில் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT