Published : 03 May 2023 06:15 AM
Last Updated : 03 May 2023 06:15 AM
நம் பூமி 70% நீரால் நிரம்பியது. பூமியில் நீர் இல்லை என்றால் உயிர்கள் கிடையாது. பூமி சூரியனிடமிருந்து இப்போது இருப்பதைவிடச் சற்று பின்னே நகர்ந்திருந்தால் நீர் முழுக்க பனிக்கட்டியாக உறைந்திருக்கும். கொஞ்சம் முன்னே நகர்ந்திருந்தால் வெப்பம் அதிகரித்து நீர் முழுக்க ஆவியாகி இருக்கும். ஆனால், இப்போது இருக்கும் தூரம்தான் திரவ நீரைப் பெற்று உயிர்கள் வாழத் தகுந்த இடம் என்கிற அந்தஸ்தைப் பூமிக்குக் கொடுத்துள்ளது.
நம் பூமிக்கு இப்படி ஒரு பெருமையைச் சேர்த்த நீர் எங்கிருந்து வந்தது? பூமிக்கு நீர் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம், பூமி உருவானபோதே நீர் இருந்தது ஆகிய இரு கூற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT