Published : 26 Apr 2023 05:54 AM
Last Updated : 26 Apr 2023 05:54 AM
நீங்களும் மகாத்மா காந்தியும் உறவினர் என்பது தெரியுமா? நம்ப முடியவில்லையா? அதுதான் உண்மை. நீங்களும் காந்தியும் மட்டுமல்ல; நீங்கள், நான், தெருவில் செல்லும் மாடு, வாசலில் நிற்கும் மரம் அனைவருமே உறவினர்கள்தாம் என்று அறிவியல் சொல்கிறது. உங்களுடைய முன்னோர்கள் யார்? தாத்தா, பாட்டி. அவர்களுடைய பெற்றோர் யார்? அந்தப் பெற்றோரின் பெற்றோர் யார்? இப்படியே தேடிச் சென்றுகொண்டிருந்தால், இறுதியாக நீங்கள் நிற்கும் இடத்தில்தான் விடை இருக்கிறது.
பரிணாம வளர்ச்சி: நாம் அனைவரும் உறவினர்கள் என்பதை அறிய பரிணாம வளர்ச்சி உதவும். பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களில் தலைமுறை தலைமுறையாக நடைபெறும் மாற்றம். ஓர் உயிர் தனது பண்புகளை இனப்பெருக்கம் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT