Published : 20 Apr 2023 05:28 PM Last Updated : 20 Apr 2023 05:28 PM
ஆர்க்டிக் எனும் அதிசயம்!
பூமியின் வட பகுதியில் அமைந்திருக்கிறது ஆர்க்டிக்.
ஆர்க்டிக் பெருங்கடலைப் போலவே, ஆர்க்டிக் பகுதியும் ரஷ்யா, கிரீன்லாந்து, கனடா, அமெரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து ஆகியவற்றின் பகுதிகளால் ஆனது.
ஆர்க்டிக்கில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடினமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
'ஆர்க்டிக்' என்ற பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. 'கரடி' என்று பொருள்.
சமீப ஆண்டுகளில் புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்க்டிக் பகுதி சுருங்கி வருகிறது.
ஆர்க்டிக்கின் சற்று வெப்பமான பகுதிகளில் மூலிகைகள், பாசிகள், சிறிய புதர்கள் வளர்கின்றன.
துருவ நரி, அணில், வால்ரஸ், சீல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் ஆர்க்டிக்கில் வாழ்கின்றன.
நார்வால் எனப்படும் தந்தம் மூக்கு திமிங்கிலம் காணப்படுகிறது.
துருவக் கரடிகள் கரடி இனங்களில் மிகவும் பெரியது.
மிக பெரிய தந்தங்களுடைய கரிபு மான்களும் இங்கே காணப்படுகின்றன.
ஆலா, பஃபின், பனி ஆந்தை போன்ற பறவைகள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன.
ஆர்க்டிக்கில் மீன், எண்ணெய், எரிவாயு, பல்வேறு கனிமங்கள் உள்பட பல இயற்கை வளங்கள் உள்ளன.
ஆர்க்டிக்கின் பனிக்கட்டியானது உலகின் நன்னீரில் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
ஆர்க்டிக்கில் உருவாகும் துருவ ஒளி கண்களைக் கவரும். இது இயற்கையாக உருவாகும் நிகழ்வு. வடதுருவத்தில் ஏற்படுவதால், வடதுருவ ஒளி (Aurora Borealis) என்று அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து வரும் துகள்களும் பூமியிலிருந்து கிளம்பும் காந்தப்புலமும் வேகமாகச் சேரும்போது துருவ ஒளி ஏற்படுகிறது.
பூமியின் சாய்வு காரணமாக ஆண்டுக்கு ஒரு நாள் முழு இருளிலும் ஒரு நாள் முழு சூரிய ஒளியிலும் இருக்கும்.
WRITE A COMMENT