Published : 23 Jul 2014 09:20 AM
Last Updated : 23 Jul 2014 09:20 AM
அம்மாவோட காய்கறி கடைக்குப் போயிருக்கிறீர்களா? அம்மா ஒவ்வொரு காயா எடுத்துக் கொடுக்க, அவற்றைக் கடைக்காரர் தராசில் எடை போட்டுப் பார்த்து திருப்பிக் கொடுப்பார். அந்த நேரத்தில் தராசை ஆசையோடு பார்ப்பீர்கள் அல்லவா? அதைப் போன்ற விளையாட்டுத் தராசை எளிதாக நீங்களே வீட்டில் செய்யலாம். எப்படிச் செய்வது எனப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
தடிமனான அட்டை ஒன்று, கறுப்பு சார்ட் பேப்பர் துண்டு ஒன்று, பென்சில், குண்டூசி, கறுப்பு ஸ்கெட்ச் பேனா, கத்திரிக்கோல், பசை.
செய்முறை:
# 1ல் காட்டியுள்ள வடிவத்தைத் தடிமனான அட்டையில் வரையவும். வரைந்த பின்னர் படத்தில் காட்டியுள்ள கோடிட்டப் பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதுதான் தராசுத் தட்டுகள் பொருத்தப்படும் ஸ்டாண்ட்.
------------------------------------------------------------
# 2 தராசுத் தட்டுக்காக இரண்டு சதுரங்களை அட்டையிலிருந்து வெட்டி எடுக்கவும். இந்த இரண்டு சதுரத் தட்டுகளை ஏற்கெனவே வெட்டி எடுத்த தராசு ஸ்டாண்டின் இரு புறங்களிலும் ஒட்டவும். படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற வடிவம் கிடைத்துவிட்டதா?
------------------------------------------------------------
# 3 அடுத்ததாக எடை பார்க்க அளவுக் குறியீடு வேண்டுமல்லவா? அதை அட்டையிலிருந்து செவ்வக வடிவில் வெட்டி எடுக்கவும். பின்னர் கறுப்பு ஸ்கெட்ச் பேனா கொண்டு படத்தில் காட்டியுள்ளது போல அளவுகளைக் குறிக்கவும்.
------------------------------------------------------------
# 4 இனி தராசு முள் வேண்டும். படத்தில் காட்டியது போல கூர்முனை கொண்ட தராசு முள்ளை சார்ட் பேப்பரிலிருந்து வெட்டி எடுக்கவும்.
------------------------------------------------------------
# 5 இப்போது எடை காட்டும் அட்டையைச் சதுர வடிவ அடித்தள அட்டை மீது நிறுத்தவும். இதற்கு படத்தில் காட்டியது போன்ற வடிவத்தை வெட்டியெடுத்து அதன் உதவியுடன் எடை காட்டும் அட்டையையும் அடித்தள அட்டையையும் இணைக்கவும்.
------------------------------------------------------------
# 6 குண்டூசியின் உதவியுடன் தராசு முள், தராசுத் தட்டுகள் ஒட்டப்பட்ட ஸ்டாண்ட் ஆகியவற்றை எடை காட்டும் அட்டை மீது இணைக்கவும். இப்போது அட்டைத் தராசு தயார். இனி கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் எடை போட்டு விளையாடலாமா?
© 2014, Amrita Bharati, Bharatiya Vidya Bhavan
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT