Published : 31 May 2017 11:56 AM
Last Updated : 31 May 2017 11:56 AM
கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்பவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்து விட்டால் இரட்டைப் பாராட்டு.
1. மத்திய ஐரோப்பாவில் அமைந்த நாடு.
2. இங்கு பலரும் பேசுவது ஜெர்மன் மொழி.
3. ஒளிப்படத்தில் காணப்படும் பிரபல தூய ஸ்டீஃபன் மாதா கோயில் இந்த நாட்டின் தலைநகரில் உள்ளது.
4. முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் பேரரசராக முடிசூடியபோது அதற்கு எதிர்வினையாக இந்த நாட்டின் பேரரசு நிறுவப்பட்டது.
5. இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் முதலாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.
6. இந்த நாட்டின் கொடியைத்தான் நீங்கள் ஒளிப்படத்தில் பார்க்கிறீர்கள்.
7. இரும்புக் கனிமம் மற்றும் பெட்ரோலியம் ஆகியவை இங்கு ஏராளமாக உள்ளன.
8. இதன் அதிகாரபூர்வ நாணயம் யூரோ.
9. இதன் தலைநகர் வியன்னா.
10. ஆஸ்திரேலியா என்ற பெயருக் குள் இந்த நாட்டின் பெயர் கிட்டத்தட்ட அடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT