Published : 30 Jan 2023 05:25 PM
Last Updated : 30 Jan 2023 05:25 PM
* தேனீக்கள் தங்களின் தேவையைவிட 2 அல்லது 3 மடங்கு அதிகமான தேனை உற்பத்தி செய்கின்றன.
* தேனீக்கள் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியவை.
* பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்குக் கடத்துவதன் மூலமாக, தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்கின்றன.
* தேனீக்கள் தம் வாழ்நாளில் ஒருமுறைதான் கொட்டுகின்றன.
* துருவப் பகுதிகளைத் தவிர, உலகம் முழுவதும் தேனீக்கள் வசிக்கின்றன.
* உயரமான மரப்பொந்துகள், மரக்கிளைகள், பொருள்களின் நுனிப் பகுதிகளில் தேனீக்கள் கூடுகளைக் கட்டுகின்றன.
* வேலைக்காரத் தேனீக்கள்தாம் கூடுகளைக் கட்டுகின்றன. பூந்தேனைச் சேமிக்கின்றன. புழுக்களைப் பராமரிக்கின்றன. கூட்டைச் சுத்தமாக வைத்திருக்கின்றன.
* ஆண் தேனீ ராணித் தேனீயுடன் குடும்பம் நடத்தி, இனப்பெருக்கத்துக்கு உதவி செய்துவிட்டு, சில வாரங்களில் இறந்தும் போய்விடுகிறது.
* ஒரு ராணித் தேனீ ஒரே நாளில் 2,500 முட்டைகள் வரை இடக்கூடியது. தன் வாழ்நாளில் சுமார் 8 லட்சம் முட்டைகளை இடுகிறது.
* குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காகப் பெருமளவு தேனைச் சேமித்து வைக்கின்றன.
* ஒரு கூட்டுக்கு ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். ஒரு கூட்டில் இருக்கும் ராணி இறந்து போனால், வேறு ராணியைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்காகச் சில புழுக்களுக்குச் சிறப்பு உணவைக் கொடுத்து, தயார் செய்து வைக்கின்றன வேலைக்காரத் தேனீக்கள்.
* புது ராணி உருவானவுடன் பழைய ராணித் தேனீ, பாதி வேலைக்காரத் தேனீக்களை அழைத்துக்கொண்டு, புதிய கூட்டை உருவாக்கும். புது ராணி பழைய கூட்டில், மீதி இருக்கும் வேலைக்காரத் தேனீக்களுடன் வசிக்கும். தேவை ஏற்படும்போது, தகுந்த இடத்தைத் தேர்வு செய்து, புதுக்கூட்டை உருவாக்கும்.
* ஒரு தேனீ தன் வாழ்நாளில் சுமார் ஒன்றரை தேக்கரண்டி தேனைச் சேமிக்கிறது.
* ஒரு கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வசிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT