Published : 02 Jul 2014 09:36 AM
Last Updated : 02 Jul 2014 09:36 AM

நீங்களே செய்யலாம்: பறக்கும் காகித பலூன்

வெப்பக்காற்று பலூனில் சாகச வீரர்கள் பறந்து செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதுபோல ஒரு விளையாட்டுப் பொருளை நாமும் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

பல வண்ணங்களில் தடித்த காகிதங்கள், பசை, ஒரு சின்ன பெட்டி, செல்லோ டேப், பெயிண்ட் மற்றும் பிரஷ் பொம்மை செய்யும் களிமண் நூல், கத்தரிக்கோல், பேனா, பஞ்ச் மெஷின், பென்சில்

செய்முறை:

1 பல வண்ணங்களில் வாங்கப்பட்ட தடித்த காகிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை இலை போல வெட்டவும். அவற்றின் முனைகளைப் பட்டத்தில் காட்டியுள்ளது போல வெட்டிக்கொள்ளவும்.

2 எல்லா இலைகளின் அடிப்பாகத்திலும் பஞ்ச் மெஷின் மூலம் துளையிடவும். பின்னர் எல்லா இலைகளையும் நூலில் கோர்க்கவும். இலைகளை தொங்கவிடுவதற்காக நூலின் இன்னொரு பகுதியைப் போதுமான அளவு விடவும்.

3 இலைகளை வட்டம் வடிவம் போலப் படத்தில் காட்டியுள்ளவாறு விரித்து வைக்கவும். அவற்றைத் தலைகீழாக ஒரு பலூன் போல் ஒன்று சேர்த்து ஒட்டவும்.

4 இப்போது நூலை ஆறு துண்டுகளாக ஒரே நீளத்தில் வெட்டிக் கொள்ளவும். நூலை ஒவ்வொரு இலையிலும் துளை இடப்பட்ட இடத்தில் ஒட்டவும். இன்னொரு பகுதியை தொங்கவிடவும்.

5 சின்னப்பெட்டியை எடுத்து அதன் மீது காகிதம் ஒட்டி வர்ணம் பூசிக் கொள்ளவும். இப்போது ஏற்ற இறக்கமின்றி ஒரே அளவில் தொங்குவது போல பெட்டியை நூல் கொண்டு இணைக்கவும்.

6 குட்டி பந்து அளவுக்கு களிமண் உருண்டையை அந்தப் பெட்டியில் வைக்கவும்.

7 தடித்த காகிதத்தில் சில மனித உருவங்களை செய்து வெட்டிக் கொள்ளவும். அவற்றின் மீது வர்ணம் பூசி பெட்டியினுள் உள்ள களிமண்ணில் அமிழ்த்தி வைக்கவும். இப்போது வெப்பக் காற்று பலூன் தயார்.

- 2014 Amrita Bharati, Bharatiya Vidya Bhavan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x